தென் பசிபிக் நாடுகளில் ஒன்றான டொங்காவை அண்மித்த கடலுக்கடியில் எரிமாலை வெடிப்பால் சுனாமி அலைகள் உருவாகியுள்ளன.
இதையடுத்து டொங்கா மற்றும் அதனை அண்மித்த தீவுப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.
சுனாமி காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எரிமலை கடலுக்கு அடியில் வெடித்து, கடலுக்கு மேலே சாம்பல் வெளியேறுவது போன்ற செய்மதி வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
https://twitter.com/fiat_2_btc/status/1482255873581928450?s=20