May 6, 2025 10:20:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்கியின் கூட்டணி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது!

File Photo

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் புதிய இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியன 2021 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்காக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.