
இலங்கையிலுள்ள ‘சகுராய்’ விமான சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொறியியலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இன்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் இலகுரக விமானம் ஒன்று கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வயலொன்றில் தரையிறக்கப்பட்டு விபத்துக்கு உள்ளானதுடன் அதில் பயணித்த வெளிநாட்டவர்கள் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து குறித்த விமான சேவை நிறுவனத்தின் விமான பயணங்களுக்கு சிவில் விமான சேவைகள் திணைக்களம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.