May 6, 2025 10:10:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு: நிதி அமைச்சர் அறிவிப்பு!

ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை சமுர்த்தி பயனாளர்களுக்கான 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.