பாராளுமன்றத்தின் விசேட புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பொலிஸ் அதிகாரியுடன் தொடர்புகளை பேணியவர்களை பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கையெடுத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் உணவகத்திற்கு தேவையான மீன்களை வாங்குவதற்காக அண்மையில் இவர் பேலியாகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போதே இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியுடன் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர் இல்லையென்று பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஆனபோதும், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற கடந்த 22 ஆம் திகதி இவர் பாராளுமன்ற வளாகத்திற்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.