January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். அராலியில் விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அராலி மத்தியில் வசிக்கும் நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் பேரூந்தில் செல்லும்போது பேருந்தானது அரச மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் அறுவர் பயணித்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் மற்றைய இருவர் சாதாரண காயங்களுக்கு உள்ளாகினர்.காயமடைந்த மூவரும் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தானது வேகக் கட்டுப்பாட்டினை இழந்தமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.