May 22, 2025 13:26:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் கிணற்றில் இருந்து யுவதியொருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந்து 19 வயது யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்தே குறித்த யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் இரவு வீட்டில் அந்த யுவதி உறங்கியுள்ள நிலையில், இன்று காலை முதல் அந்த யுவதி காணாமல் போயிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்ட போது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் யுவதி சடலமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமை அந்த இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் அந்த சடலத்தை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.