July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காதர் மஸ்தான் எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆளும் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்காக அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் நேற்று சென்றிருந்த போது அந்த சந்திப்புக்கு முன்னர் நடத்தப்பட்ட என்டிஜன் பரிசோதனையின் போதே காதர் மஸ்தான் எம்.பிக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து காதர் மஸ்தான் எம்.பியும், ஏனைய எம்.பிக்களும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகவுள்ளன.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.