தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டு எதிர்வரும் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகள் விடுமுறை நாட்கள் என்பதனால் அதற்கு முதல்நாள் 12 ஆம் திகதியையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு புத்தாண்டு பண்டிகயை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடுமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.