November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் ‘CMS01 செயற்கைக்கோள்’ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

photo:Twitter/ISRO

டெலிமெடிசின், தொலைதூரக்கல்வி, பேரிடர் மேலாண்மை, இன்டர்நெட், சேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட CMS01 செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

CMS01 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானி சிவனும் தன்னுடைய பேட்டியின்போது உறுதி செய்தார்.

இந்த செயற்கைக்கோள், இந்தியாவின் தகவல் தொடர்பை மேம்படுத்த அனுப்பப்படும் செயற்கைக்கோள் வரிசையில் 42 வது  ஆகும்.

மேலும் இந்த செயற்கைக்கோளை சுமந்து சென்ற PSLV-C 50 ராக்கெட்டுக்கு இது 52வது பயணமாகும்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக் கோளுக்கு மாற்றாகவே  CMS01 தற்போது செலுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து விஞ்ஞானி சிவன் பேசும்பொழுது, அடுத்த ராக்கெட் தனியார் பங்களிப்புடன் இருக்கும் என்பதையும் குறிப்பிட்டார்.