January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நைஜீரியாவில் பாடசாலை மீது ஆயுததாரிகள் தாக்குதல்: மாணவர்கள் பலரை காணவில்லை

நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கட்சினா பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

800 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்ற பாடசாலையொன்றையே இனந்தெரியாத நபர்கள் இலக்குவைத்துள்ளனர்.

எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.துப்பாக்கி சத்தங்கள் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரும் பாடசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை,பல மாணவர்கள் பிடித்துச்செல்லப்படுவதை பார்த்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.