January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேலியாகொட புதிய மெனிங் சந்தை வியாபார நடவடிக்கைகளுக்காக நாளை முதல் திறப்பு

கொழும்பு – பேலியாகொட புதிய மெனிங் சந்தை மொத்த வர்த்தகத்திற்காக நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

அதன்படி நாளை முதல் தினமும் பிற்பகல் 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுமென மெனிங் சந்தை பொதுச் சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக, சந்தையில் நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டும் தங்கள் விவசாய விளைபொருட்களை கொண்டுவருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய விளைபொருட்களை மொத்தமாக அனுப்ப வேண்டாம் என்றும் குறைந்த அளவில் அனுப்புமாறும் அனைத்து விவசாயிகளிடமும்  கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் கொரோனா கொத்தணியாக இனம் காணப்பட்ட பேலியாகொட மீன் சந்தைக்கு அருகாமையில் குறித்த பேலியகொடை புதிய மெனிங் சந்தை உள்ளதால், இந்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இருந்த மெனிங் சந்தை பேலியாகொடவில் அமைக்கப்பட்ட புதிய சந்தை கட்டட தொகுதிக்கு மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.