May 22, 2025 17:23:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இன்று 3 கொரோனா மரணங்கள் பதிவானது

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹெயியன்துடுவ பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை ​சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சற்றுமுன்னர் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 335 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,978 ஆக அதிகரித்துள்ளது.