மாநாடு படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடிக்கிறார்.இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின் தனது பெயரை அப்துல் காலிக் என்றுதான் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது .இந்த படத்திற்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார் .
இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சிலம்பரசன் தற்போது செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் .அதில் எங்கெல்லாம் அநீதி தலைதூக்கிறதோ நான் அங்கு இருப்பேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
பின்னர் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு தடையாக கொரோனா வந்தது. பின்னர் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதால் கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் பாண்டிச்சேரியில் மாநாடு படப்பிடிப்பு தொடங்கியது.
அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகிவரும் மாநாடு படத்தில் இயக்குனர் பாரதிராஜா ,எஸ்.ஏ சந்திரசேகர் ,கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், எஸ். ஜே சூர்யா, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
அண்மையில் இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் சுற்றிலும் கலவரம் நடந்து கொண்டிருக்க நடிகர் சிலம்பரசன் அமைதியாக தொழுகை செய்து கொண்டிருந்தார் . தற்போது நெற்றிப்பொட்டில் தோட்டாவுடன் வெளியாகியுள்ளது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் .
நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டுடன் தலையிலிருந்து ரத்தம் வழிந்தவாறு சிம்பு தொழுகையில் ஈடுபடுவது ,பின்னணியில் அரசியல் தலைவர்களின் கட்டவுட் .கலவரம் என சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் , படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.