வவுனியா நகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கூட்ட அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது, வரவு செலவுத் திட்ட அறிக்கையை ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் எம்.லறீப் முன்மொழிந்ததோடு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜ.கனிஸ்டன் வழிமொழிந்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஆட்சியமைத்து இருக்கும் வவுனியா நகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
கூட்டணியின் பெண் உறுப்பினரான பா.ஜெயவதனி வரவு செலவுத் திட்டம் நிறைவேறியதன் பின்னர்,தாமதமாக சபைக்கு வருகை தந்தமை ஆளும் கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.