October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் மீது சுமைகளை சுமத்தும் வரவு- செலவுத் திட்டம்; கூட்டமைப்பு

நாடு எதிர்கொள்ளும் கடன் நெருக்கடிகளை சமாளிப்பதற்கு இன்று முன்வைக்கப்பட்ட வரவு- செலவு திட்டமானது கைகொடுக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு முன்வைத்துள்ள 2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை  அதன் பேச்சாளர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்று வெளியிட்டார்.

“மிகவும் பலவீனமான வரவு- செலவுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்துள்ளது.  நாடு பாரிய கடன் நெருக்கடியில் உள்ள நிலையில், எமது சர்வதேச கடன்கள் எல்லை மீறிய ஒன்றாக காணப்படுகின்றது.

அதனை சமாளிக்கும் வரவு- செலவுத் திட்டமாக அல்லாது மேலும் கடன்களை வாங்கும் வரவு- செலவுத் திட்டமாகவே இது அமைந்துள்ளது என்பதே எமது நிலைப்பாடாகும்.

இலங்கையின் வரவு- செலவுத் திட்டம் 2021; முக்கிய அம்சங்கள்

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கென வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்

நாட்டை கடன் பொறிக்குள் தள்ளும் வரவு-செலவு திட்டம்; ஜே.வி.பி

பிரதமர் தனது உரையினை நிறைவு செய்யும் வேளையில் நாட்டினை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்லும், துரிதமாக அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளோம் எனக் கூறினார்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்வதை விடவும் கடன்களில் இருந்து மீளவே போராட வேண்டியுள்ளது என்பதே உண்மையாகும். எனவே மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும், மக்கள் மீது சுமைகளை சுமத்தும் வரவு- செலவுத் திட்டமொன்றை இன்று அரசாங்கம் முன்வைத்துள்ளது.

நாடு இன்று பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ள, சவால்களை வெற்றிகொள்ள இந்த வரவு-செலவுத் திட்டம் இயலுமான ஒன்றாக இல்லை என்பதே தமிழ் தேசிய கூட்டமைபின் நிலைப்பாடு” என்று சுமந்திரன் கூறினார்.