இலங்கையின் முன்னாள் கடற்தொழில் இராஜாங்க அமைச்சரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் வெதஆரச்சி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மீனை பச்சையாக உண்டு காட்டினார்.
மீன்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதிப்படுத்தவே அவர் இவ்வாறு பச்சை மீனை உண்டுகாட்டியதாக கூறினார்.
பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில், மீன்கள் மூலமாக வைரஸ் பரவலாம் என்ற வதந்தி நாட்டில் உலாவிய நிலையிலேயே முன்னாள் அமைச்சர் இந்த விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.
மக்கள் மீன்களை வாங்குவதை தவிர்ப்பதால் நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மீனவர்களும், மீன்பிடித் தொழில்துறையில் தங்கியுள்ள ஏனையோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மீன்பிடித் தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி கேட்டுக்கொண்டார்.