விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் பணிக் குழுவினரால் இன்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேராவில் மாவீரர் துயிலும் இல்லப் பணிக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள் இணைந்து துயிலும் இல்லத்துக்குச் சென்று அங்கே வீரர்களுக்குச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த தர்மபுரம் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள், சிரமதானப் பணிகளை முன்னெடுத்தவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த இடத்தில் சிரமதானப் பணிகளைச் செய்வதற்கு உரிய பிரதேச சபையின் அனுமதியைப் பெற்று சுகாதார நடைமுறைகளுக்கு அமைய குறித்த சிரமதானப் பணிகளை முன்னெடுக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர் என்று பணிக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்