January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரான் விக்கிரமரத்னவிடம் சி.ஐ.டி.யினர் 2 மணிநேரம் விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேரம் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அண்மையில் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும் புள்ளி மாகந்துரே மதுஷ் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி ஆகியோர் குறித்து ஊடக சந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே எரான் விக்கிரமரத்னவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.