May 24, 2025 19:23:03

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்ற உறுப்பினர் டயனாவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

File photo: Facebook/ Diana Gamage

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த, நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில், கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம்,  டயனா கமகேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டமைக்காகவே கட்சியில் இருந்து இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாஸவின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, டயனா கமகேயின் உறுப்புரிமையை இரத்துச் செய்வது குறித்து கட்சியின் மத்திய குழுவில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்க்கட்சியில் இருந்து அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஆளும் தரப்பில் ஆசனங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஆளும் கட்சியின் பிரதம கொரடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.