இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுகளை மேற்பார்வை செய்வதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட புதிய தெரிவுக் குழுவொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டு தெரிவுக் குழு மேற்படி பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது.
புதிய குழுவின் தலைவராக, கிரிக்கெட் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைமை அதிகாரி அஷந்த டி மெல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சமிந்த மென்டிஸ், பிரமோத்ய விக்ரமசிங்க, ஹேமந்த தேவப்ரிய, ரஞ்சித் மதுரசிங்க, உவைஸ் கர்னைன் மற்றும் நில்மினி குணரத்ன ஆகியோர் புதிய தெரிவுக் குழு உறுப்பினர்களாவர்.
புதிய தெரிவுக் குழு தொடர்பான பரிந்துரைகள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற தேசிய அணி, மகளிர் அணி மற்றும் 19 வயதின் கீழ் அணி போன்றவற்றுக்கான தெரிவுகளை மேற்பார்வை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.