May 22, 2025 22:29:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வில்பத்துவில் அழிக்கப்பட்ட வனப் பகுதியை மீள உருவாக்குமாறு ரிஷாட்டுக்கு நீதிமன்றம் உத்தரவு

File photo: Facebook/ Centre For Environmental Justice

வில்பத்து சரணாலயத்தின் கல்லாறு வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு நடவடிக்கை  சட்ட விரோதமானது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தமது சொந்த நிதியில் காடழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்கள் நட வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை அழித்து, சட்ட விரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியை அழித்து, கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் 30 வருட யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வடக்கின் வசந்தம் அபிவிருத்தின் திட்டத்தின் அங்கமாகவே மேற்படி வனப்பகுதி அழிக்கப்பட்டு, மக்கள் குடியேற்றப்பட்டதும், அப்போது மீள்குடியேற்ற அமைச்சராக ரிஷாட் பதியுதீன் செயற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.