October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பெறுபேறுகள், வெட்டுப் புள்ளிகள் வெளியாகின

2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தள முகவரிகளில் குறித்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகளும் வெளியாகியுள்ளன.

அதற்கமைய கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 162 புள்ளிகளும்,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு 160 புள்ளிகளும்,

திருகோணமலை, பதுளை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு 159 புள்ளிகளும்,

நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 158 புள்ளிகளும்,

புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 155 புள்ளிகளும் வெட்டுப்புள்ளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.