February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாவட்டத்தில் 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில்

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணிய சுமார் 600 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் .மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் இருந்தவர் என்று மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தொற்றாளருடன் நேரடித் தொடர்புகளை பேணியுள்ளவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாததார தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இதேவேளை ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் தற்போது பிசிஆர் பரிசோதனையின் பின்னர் கட்டம் கட்டமாக தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டு வருகிக்கின்றனர்.

இதன்படி தற்போது சுமார் 600 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.