கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மேலும் 5 பொலிஸ் பிரிவுகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் மருதானை, கொம்பனி வீதி, கோட்டை, புறக்கோட்டை , டாம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகள் நாளைமறுதினம் அதிகாலை 5 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் முடக்கல் நிலை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கம்பஹா மாவட்டத்தில் களனி, ஜா – எல, நீர்கொழும்பு, ராகம, வத்தளை, பேலியகொட, கடவத்தை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பொலிஸ் பிரிவுகளில் நாளை மறுதினம் அதிகாலை 5 மணிக்கு முடக்கல் நிலை நீக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.