November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு அடுக்குமாடிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவை

கொழும்பின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இலவச நடமாடும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட்- 19 வைரஸ் பரவலால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகத் தெரியவருகின்றது.

இதனடிப்படையில், தொற்றா நோய்களுக்கு சிகிச்சையளிக்க நடமாடும் மருத்துவ முகாம்களை அடுக்குமாடி குடியிருப்புகளில் நடத்துவதற்கு கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு, கொழும்பில் உள்ள மக்கள் தொலைபேசி மூலம் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்வரும் அடிப்படையில் ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.

  • மெத்சந்த செவன-                                   நவம்பர் 16 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • மினிஜய செவன-                                    17 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • ரன்மித் செவன –                                       18 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • சிரிசந்த செவன –                                    19 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • என்.எச்.எஸ் வீட்டுத் தொகுதி –             20 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • ரந்திய உயன –                                           21 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • சிரிமுது உயன –                                       23 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • முவதொர உயன –                                  24 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • சிரிசந்த செவன –                                   25 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • ரன்முது செவன –                                    26 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • சத்ஹிரு செவன –                                   27 ஆம் திகதி காலை 9 மணி முதல்
  • லக்ஹிரு செவன –                                 28 ஆம் திகதி காலை 9 மணி முதல்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் மருத்துவ தேவைகளுக்கான அணுகல் தடைப்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறான நடமாடும் இலசவ மருத்துவ சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுகாதார ஒழுங்குகளைப் பேணி, மக்கள் இதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.