சுகாதார நடைமுறைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பிரதேசத்தில் நடைபெறும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகவே இராணுவத்தின் மோட்டர் சைக்கில் படையணி இவ்வாறு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரோந்துப் படையினர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை சோதனைக்குட்படுத்துவதோடு, பொதுமக்கள் கொரோனா தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதையும் கண்காணிக்கின்றனர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து பிரதேசத்தில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
அனுமதிப் பத்திரமின்றி மணல் அகழ்வுகளை முறியடிப்பதும் இந்த ரோந்து நடவடிக்கைகளின் நோக்கமாகும்.
இராணுவ மோட்டார் சைக்கிள் படையணி அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.