February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறையிலுள்ள மூன்று எம்பிக்களையும் சபை அமர்வுகளுக்கு அழைக்காதிருக்க தீர்மானம்

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகின்ற நிலையில், சிறைச்சாலைகளிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை, சபை அமர்வுகளுக்கு அழைக்காமல் இருக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான செயலணியால் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன், இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் தொடர்பில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் சிறைச்சாலைகளிலிருந்தே கடந்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வந்து சென்றனர்.

ஆனால், இனிவரும் அமர்வுகளுக்கு அவர்களை அழைக்காது இருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம், சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக அவர்களை அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.