November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றத்தினால் உத்தரவிட்டுள்ளது.

2019  நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தி பஸ்கள் மூலம் புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அழைத்துச் சென்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரிஷாத் பதியுதீன் ஒக்டோபர் 19 ஆம் திகதி தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு ஒக்டோபர் 27 ஆம் திகதி மனுவொன்றை ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதேபோன்று இன்றைய தினத்திலும் அவரால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன் அந்த மனுவும் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.