இலங்கை இராணுவத்தால் முதற் தடவையாக ‘ட்ரோன்’ படையணியொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பீரங்கி படையணியின் புதிய பிரிவாக ட்ரோன் படையணியை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புதிய சவால்களுக்கு இராணுவத்தைத் தயார்ப்படுத்தும் வகையில் இந்த புதிய படையணி உருவாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அவசர நிலைமைகளின் போது இந்தப் படையின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் இன்றைய தினம் ட்ரோன் படையணியின் ஆரம்ப நிகழ்வு இராணுவத் தளபதி தலைமையில் நடைபெற்றது.