January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பிரசாந்தன் கைது!

வழக்கொன்றின் சாட்சியாளர் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்துக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை இடைமறித்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ம் திகதி ஆரையம்பதி பிரதேசத்தில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 2015ம் ஒக்டோபர் 23 ஆம் திகதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்தன், 2016 ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கமைய, இன்றைய தினம் கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினரால் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரசாந்தன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.