January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் இருவர் பலி; கொரோனா உயிரிழப்பு 46 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல்,68 வயதுடைய மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் இன்று மாத்திரம் ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.