உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த தடை அமுலில் இருக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பிரதேசங்களில் இருந்து வெளி இடங்களுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களை தடை செய்யுமாறு, ஜனாதிபதியினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்புடையவர்களை தவிர வேறு நபர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது என்பதுடன், அங்குள்ளவர்களுக்கு மருத்துவ காரணங்கள் இன்றி எக்காரணத்திற்காகவும் வெளியில் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.