
யாழ்ப்பாணம், தென்மராட்சி கரம்பகம் பகுதியில் கருக்கலைப்பு மற்றும் பாலியல் தொழில் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த இடம் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது குறித்த இடத்திலிருந்து கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் சாதனங்களை கைப்பற்றிய பொலிஸார் இரண்டு பெண்களையும் குறித்த விடுதியின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த நிலையத்திற்கு மருந்துப் பொருட்களை வழங்கிய குற்றச்சாட்டில் வைத்தியசாலை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நடவடிக்கையெடுத்துள்ளனர்.