
வவுனியா, நெடுங்கேணியில் உள்ள ஊற்றுக்குளம் உடைப்பெடுத்தமையினால் அந்தப் பிரதேசத்தில் உள்ள வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வவுனியாவில் பெய்த கடும் மழையினால் அந்தக் குளத்திற்கு நீர் வரத்து அதிகரித்த நிலையிலேயே குளம் உடைப்பெடுத்துள்ளது.
குளத்தின் அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பிரதேசத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.