May 3, 2025 14:54:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா : ஆலயங்களில் தீபாவளி வழிபாட்டுக்கு கட்டுப்பாடுகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்ப்பதுடன், இந்து ஆலயங்களில் ஒரே நேரத்தில் வழிபாடுகளில் ஈடுபடக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கையை 5 ஆக வரையறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஆலய அறங்காவலர்களுக்கு அறிவுறுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் அதிகளவானவர்கள் ஒன்றுகூடுவது அவதானத்துக்குரிய செயற்பாடாகும்.

எனவே, தீபாவளி பண்டிகையின் போதும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.