பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 222 பஸ் வண்டிகளில் வாக்காளர்களை அழைத்துச் சென்றதன் மூலம் ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82(1) ஆம் பிரிவை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரிஷாட் பதியுதீனுக்கான பிணை மனுவை கோட்டை நீதவான் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.