
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இளம் குறும்பட தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் கலைஞர்களை இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் இளம் கலைஞர்கள் குறும்பட தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அவர்கள் தமது அடையாள அட்டையை பெற்றுகொள்வதிலுள்ள இடர்பாடுகள் உட்பட கலைஞர்களின் பல தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறியப்பட்டது.
மேலும் அவர்களுக்கு “பத்மபூசணம்“ விருது பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் இழுபறி நிலமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கொவிட் இடர் நிலைமைகள் தீர்ந்த பின் யாழ் குறுந்திரைப்பட விழா ஒன்றை மாவட்டத்திற்கு வெளியே நடாத்துவதன் ஊடாக இங்கு உள்ள பல்வகை கலைஞர்களை வெளி உலகிற்கு எடுத்துகாட்டுவோம் என்று கூறியுள்ளார்.