January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் குளத்திற்குள் இருந்து பழமையான ஐம்பொன் சிலைகள் மீட்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, சங்கானை ஓடக்கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உள்ள குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

குளத்திற்குள் சிலைகள் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் அந்த சிலைகளை மீட்டுள்ளனர்.

சுமார் 60 ற்கும் மேற்பட்ட வருடங்கள் பழமையான முருகன், 3 மயில்கள், கலசம் ஆகிய ஐம்பொன் சிலைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

பல வருடங்கு முன்னர் அந்த சிலைகள் குளத்திற்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த சிலைகளின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட சிலைகள் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.