November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமெரிக்காவை போன்று இன, மத பேதமற்ற தலைவரை இலங்கை எப்போது தெரிவுசெய்யப் போகின்றது?’

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப் போன்று இலங்கை எப்போது இனம், மதம் ஆகியவற்றைப் புறந்தள்ளி திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது;

நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயமாகும்.

இதனைப்போன்று இனம், மதம், சாதி போன்றவற்றை விடுத்து திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எப்போது ஒரு தலைவரைத் தெரிவுசெய்யப் போகின்றது என குறிப்பிட்டுள்ளார்.