January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிக்கடை சிறைச்சாலையில் சடுதியாக அதிகரித்தது கொரோனா வைரஸ்; 72 பேருக்கு இன்று தொற்று

கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் ஏற்கனவே சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கும், கைதிகள் 29 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக, வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 71 கைதிகளும், சிறைச்சாலை ஊழியர் ஒருவரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனாத் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் 89 பெண் கைதிகளும், 11 ஆண் கைதிகளும், சிறைச்சாலை அதிகாரி ஒருவரும், சிறைச்சாலை ஊழியர் ஒருவரும் அடங்குகின்றனர்.