April 26, 2025 0:41:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(காணொளி) கொரோனாவின் பிடி நீங்க இறை ஆசி வேண்டி யாழ்ப்பாணத்தில் யாகம்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் அந்த நோயிலிருந்து விடுபட இறை ஆசி வேண்டி யாழ்ப்பாணத்தில் யாகம் நடத்தப்பட்டது.

கொரோனா நோயிலிருந்து நாட்டு மக்கள் விடுபடுவற்காக சிறப்பு வழிபாடுகளை நடத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ விடுத்திருந்த வேண்டுகோளின்படி யாழ். இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த யாகம் நடாத்தப்பட்டது.

யாழ். வண்ணார் பண்ணை பெருமாள் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இன்று மாலை நடைபெற்ற இந்த சுதர்சன ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகளில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.