
இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக 35 ஆவது மரணமும் பதிவாகியுள்ளது.
78 வயதுடைய ஆண் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரேத பரிசோதனைகளின் மூலம், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட மாரடைப்பே குறித்த நபர் உயிரிழப்பதற்கு காரணம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.