வவுனியாவில் தேசிய ரீதியிலான கிரிக்கெட் மைதானத்தினை நிர்மாணிப்பதற்கு விவசாய பண்ணையின் மேட்டு நிலப்பகுதியை பெற்றுத்தருமாறுக் கோரி வவுனியா மாவட்ட கிரிக்கெட் ஆர்வலர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொறை முன்னெடுத்தனர்.
வவுனியா யாழ் வீதியில் விவசாய பண்ணைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ‘எதிர்கால சந்ததிக்காகவாவது மைதானம் வேண்டும், இந்த காணியை மைதானத்திற்காக தா’ ‘வவுனியாவிற்கு சொந்த கிரிக்கெட் மைதானம் வேண்டும்’ போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் விளையாட்டுத்துறை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாளை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகை தரவுள்ள நிலையிலேயே இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான ஒருவரும் குறித்த இடத்திற்கு வருகை தந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.