இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 100 பேர் இது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 27 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 13 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் கொழும்பு, பேலியாகொட மீன் சந்தை ஊடாக உருவான கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை வரையான தரவுகளின் படி மாவட்டவாரியான தகவல்கள்:
மட்டக்களப்பு மாவட்டம்
கோரளைப்பற்று மத்தி- 42 பேர்,
செங்கலடி- ஒருவர்
கிராந் ஒருவர்
வெல்லாவெளி- ஒருவர்
பட்டிருப்பு- ஒருவர்
களுவாஞ்சிக்குடி- ஒருவர்
காத்தான்குடி- ஒருவர்
ஏறாவூர்- 6 பேர்
செங்கலடி- ஒருவர்
மட்டக்களப்பு- 5 பேர்
அம்பாறை மாவட்டம்
பதியத்தலாவை- 2 பேர்
தெஹியத்தைகண்டி- 3 பேர்
அம்பாறை- ஒருவர்
தமணை- ஒருவர்
கல்முனை தெற்கு- 5 பேர்
பொத்துவில்- 7 பேர்
சாய்ந்தமருது- ஒருவர்
இறக்காமம் – 6 பேர்
அக்கரைப்பற்று – ஒருவர்
திருகோணமலை மாவட்டம்
குச்சவெளி- ஒருவர்
தம்பலகாமம்- ஒருவர்
திருகோணமலை- 5 பேர்
மூதூர் 6 பேர்
இதனிடையே, வைரஸ் தொற்றாளர்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளர்கள் தொடர்புகளை வைத்திருந்த மேலும் பலரைத் தேடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும் 5 லட்சம் பிசிஆர் சோதனைகள்
இதேவேளை, இலங்கையில் இதுவரை 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 11,620 பிசிஆர் பரிசோதனைகளில் 400 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றிரவு வரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,970 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களில் 7,186 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 5,754 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.