May 28, 2025 14:34:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 30 ஆவது உயிரை பறித்தது கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த குறித்த இளைஞர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் இறப்பையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.