File Photo – pmdnews
‘இடுகம’ என்ற பெயரில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொவிட்–19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு இது வரையில் 1,693 மில்லியன் ரூபா நன்கொடைகள் கிடைத்துள்ளன.
குறித்த நிதியத்திற்காக நேற்றைய தினத்தில் 75 இலட்சம் ரூபா பணம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அந்த நிதியத்தில் தற்போதைய இருப்பாக, 169 கோடியே 34 இலட்சத்து 75 ஆயிரத்து 780 ரூபா உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர்.
காசோலைகள் மூலமும் அல்லது www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் நிதியத்திற்கு பங்களிப்பை செய்ய முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.