
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் மேலும் 30 பேர் வரையிலானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களின் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரவித்தனர்.
விபத்தில் சிக்குண்டவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று கொத்மலை – கெரண்டிஎல்ல பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
விபத்தில் பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.