
தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகள் பலவற்றை வென்றுள்ள போதும், அவற்றில் பல இடங்களில் அந்தக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையை விடவும் ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள ஆசனங்களின் எண்ணிக்கையும் சமமான எண்ணிக்கையாக அமைந்துள்ளது.
இதனால் அவ்வாறான உள்ளூராட்சி சபைகளில் எதேனும் கட்சியுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடனோ ஆட்சியமைக்க வேண்டிய நிலைமையே தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.
வெற்றி பெற்றுள்ள சபைகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.