February 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு செலவுத்திட்டம் 2025 – Live Blog

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்தி வருகிறார்.

  • வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாவிற்கும் நீதியை அரசாங்கம் உறுதி செய்யும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, இலஞ்சம் வாங்குவதற்கு அஞ்சும் சமூகத்தை உருவாக்குவோம்.
  • இந்த அரசாங்கம் ஊழல்களை சகித்துக் கொள்ளாது எனவும் இலஞ்சம் பெற முயற்சிப்பவர்கள் அச்சப்பட வேண்டும்.
  • 2025 பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதியின் தாராளமயமாக்கல் 2025 ஆம் ஆண்டிற்கான வருமான ஆதாயத்தின் பெரும்பகுதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வரிக் கொள்கை நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15.1 வீதமான வருமான இலக்குகளை அடைய இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
  • வணிகங்கள் முழுவதும், குறிப்பாக VAT-ல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில், Point-of-Sale (POS) இயந்திரங்களைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும், பணத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் ஒரு முக்கிய முயற்சியாக செயல்படுத்தப்படும்.
  • கடந்த நிர்வாகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை வருமான வரியை தொடர்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  • தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ஆக அதிகரிக்க அரசாங்கம் தலையிடும்.
  • 2020 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அனைத்து ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய அதிகரிப்பு மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.
  • அரச சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வுகள் மற்றும் இடமாற்றங்கள் ஆகியவை அரசியல் செல்வாக்கு அற்ற தகுதிகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் கண்டிப்பாக அமையும்.
  • பொதுச் சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்ப 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த அவர், இந்த ஆண்டு முதல் அத்தியாவசிய பொது சேவைப் பணிகளில் 30,000 நபர்களை பணியமர்த்துவதற்கான மூலோபாய ஆட்சேர்ப்பு திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்து.
  • அரச துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக உயர்த்தி சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  • சம்பள உயர்வு மூன்று கட்டங்களாக அமல்படுத்தப்படும்.
  • தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த குறைந்தபட்ச ஊதியத்தை ஏப்ரல் மாதத்தில் 21,000 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு முதலாளிமார் சம்மேளனம் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளனர்.
  • மேலும் ஊதியம் 2026 ஆம் ஆண்டு முதல் 30,000 ரூபாவாக உயர்த்தப்படும் என்றார்.
  • “தேசிய கலாசார விழா” நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டு டிசம்பரில் நிறைவு பெறும்.
  • இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த விழா தனியார் துறையின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்படும்.
  •  குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டங்களை புனரமைப்பதற்காக அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
  • மீள்குடியேற்றத்திற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • நாட்டிற்கு விசேட பங்களிப்புகளை வழங்கும் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொட்டாவாவில் வீடமைப்புத் திட்டம் ஒன்று நிர்மாணிக்கப்படும்.
  • தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக அரசாங்கம் 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
  • மலையக தமிழ் இளைஞர்களின் தொழில் பயிற்சி, வாழ்வாதார அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு மேலதிகமாக 2,450 மில்லியன் ரூபாவும், தோட்ட சமூகத்தின் பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்காக 866 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • யானை-மனித மோதலைத் தீர்க்க அரசாங்கம் 640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 5,611 கிலோமீற்றர் மின்சார வேலிகளை மேம்படுத்துவதற்காக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புனரமைப்புக்காக 1,456 கிலோமீற்றர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • யானை-மனித மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 240 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கடனைத் தீர்ப்பதற்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • அரசாங்கம் வங்கிகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு 2025 ஆம் ஆண்டில் கடன் மூலதனத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 10,000 மில்லியன் ரூபாவையும், வட்டி செலுத்துதலுக்காக 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
  • இந்த மரபுவழிக் கடன் சேவைச் செலவுகள் அரசாங்கத்தால் தீர்க்கப்பட்டவுடன், இயக்க இலாபத்தை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முழுப் பொறுப்பாகும்.
  • பழைய ரயில் பயணிகள் பெட்டிகளை புனரமைக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • 2025 ஆம் ஆண்டிற்கு புதிய ரயில் பெட்டிகளை இணைக்க ரயில்வே திணைக்களத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • 100 சாதாரண பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 3000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பம் கொண்ட பேருந்துகள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும்.
  • இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்குத் திரும்பும்போது அவர்களுக்கு மிகவும் தாராளமான வரி இல்லாத கொடுப்பனவை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
  • ஏப்ரல் பண்டிகை காலத்துக்காக சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • மூத்த பிரஜைகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதற்காக 15 பில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • 60 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், சந்தையில் நிலவும் வட்டி விகிதங்களை விட, 3 சதவீத வருடாந்திர கூடுதல் வட்டி விகிதத்துடன் 1 மில்லியன் ரூபா வரையிலான ஓராண்டு நிலையான வைப்புத்தொகைக்கு தகுதி பெறுவார்கள்.
  • இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 250,000 ரூபாவிலிருந்து 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும்.
  •  இளைஞர்களின் தற்கொலை வீதத்தை கருத்தில் கொண்டு, மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை சேவைகளை விரிவுபடுத்தும் நடுத்தர கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • கல்வி அமைச்சுடன் இணைந்து சுகாதார அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.
  • சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
  • அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • வடக்கு தென்னை முக்கோணத்தில் 16,000 ஏக்கர் தென்னை பயிரிட 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • நாட்டின் பால் உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்காக 2500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.
  • குறைந்த வருமானம் பெறும் முதியோருக்கான கொடுப்பனவு 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக உயர்த்தப்படும்.
  • நெல் மற்றும் அரிசியை ஒழுங்குபடுத்துவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
  • சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  • ஐந்து மாகாணங்களில் பாடசாலைகளின் விளையாட்டு அபிவிருத்திக்காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • யாழ்ப்பாணம் பொது நூலகத்தை மேம்படுத்த 100 மில்லியன் ஒதுக்கப்படும்.
  • தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கொடுப்பனவை தற்போதுள்ள 750 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவாக அதிகரித்தல்.
  • உத்தேச இலங்கை மின்சார (திருத்த) சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
  • மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 185 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான மருத்துவமனையில் (LRH) ஆட்டிசம் சிகிச்சை மையத்தை நிறுவ 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பின் அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படும்!
  • பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ஒதுக்கப்படும்.
  • 2025 ஆம் ஆண்டு சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  •  கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டசத்து வழங்குவதற்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
  • கட்டம் கட்டமாக பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி இலங்கை மாறும் போது டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை ஸ்தாபிக்கப்படும்.
  • டிஜிட்டல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதே எமது முன்னுரிமை. இதற்காக  புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.  அத்துடன் தரவு தனியுரிமையை சான்றளிக்க தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.
  • இலங்கையில் புதிய சுற்றுலா தலங்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
    அனுராதபுரம் மற்றும் யாப்பஹுவ போன்ற சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இந்த இடங்கள் முக்கிய கலாச்சார மற்றும் வரலாற்று தலங்களாக முத்திரை குத்தப்பட்டு சந்தைப்படுத்தப்படும்.
  • தற்போதுள்ள அரச வங்கி முறைமையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) நலனுக்காக அரச அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்படும்.
  • தரவு பாதுகாப்பிற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்.
  •  பணத்தாள்களின்பயன்பாட்டை படிப்படியாக நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வலுப்படுத்துடன் அதற்கு தேவையான சட்டங்கள் படிப்படியாக பலப்படுத்தப்படும்.
  •  பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்குத் தேவையான ஒப்புதல்களுடன் ‘அனைத்து சேவைகளும் ஒரே இடத்திலிருந்து’ என்ற கருத்து உருவாக்கப்பட்டு வருகிறது.
  •  டிஜிட்டல் பொருளாதாரத்தை துரிதப்படுத்த 3000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதாரம் தேசியப் பொருளாதாரத்தின் பன்னிரெண்டு சதவீத நிலையை எட்ட வேண்டும் என்பதே இலக்கு.
  •  வருடாந்த தகவல் தொழில்நுட்ப வருவாயை ஐந்து பில்லியன் டொலராக உயர்த்த நடவடிக்கை. சுற்றுலாத் துறைக்கு டிஜிட்டல் டிக்கெட் வழங்கும் முறை தொடங்கப்படுவதுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  •  பண்டாரநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் ஜப்பானின் உதவியுடன் ஆரம்பிக்கப்படும்.
  •  அபிவிருத்தி வங்கியொன்று ஆரம்பிக்கப்படும்.
  • தற்போதுள்ள அரச வங்கிகளின் கட்டமைப்பில் இருந்து அபிவிருத்தி வங்கி தொடங்கப்படும் என்றும்
    அபிவிருத்தி கடன் திட்ட யோசனை முறைக்கு அரச வங்கிகள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
  •  புதிய கண்டுபிடிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் வணிகமயமாக்கலுக்கு ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொது வளங்களை மக்கள் பாவனைக்கு திறம்பட பயன்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
  • அதிக செலவாகும் அனைத்து அரச சொகுசு வாகனங்களும் மார்ச் மாதம் ஏலத்தில் விடப்படும் என்றும் இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. அவர்களுக்கு வாகன அனுமதிகளும் கிடைக்காது.
  • மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு வாகனங்களோ அனுமதிப்பத்திரங்களோ இல்லை.அத்துடன் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் போஷாக்குக்கான திரிபோஷா திட்டத்திற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • பாடசாலைக் கல்வியினை நவீனமயமாக்க  நடவடிக்கை எடுக்கப்படும்.  குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவரப்படும்.
  • பல்கலைக் கழகங்களின் தரத்தினை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
  • நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடுள்ள சிறுவர்களுக்காக சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.
  • கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளினால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய  நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாது வரிசையில் நின்ற மக்கள் மரணித்த சம்பவங்களும் பதிவாகியிருந்து.
    ஆனால் அந்த நிலை தற்பொழுது மாற்றம் பெற்றுள்ளது.
  • சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் முயற்சிகளை நாம்  முன்னெடுத்துள்ளோம். நாங்கள்  கடனைத்  திரும்பச் செலுத்துவதற்கு  இன்னும் 3 வருட கால அவகாசம் உள்ளது.  அதற்குள் எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்.
  • எமது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் .
  • இலங்கையின் ஏற்றுமதித் துறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதற்காக  தேசிய ஏற்றுமதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
  • அத்துடன் சந்தை வாய்ப்பினை விரிவு படுத்தி ஏற்றுமதியை முதன்மையாகக்  கொண்ட முதலீடுகள் அதிகரிக்கப்படும்.
  • எமது அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன் தரமான மற்றும் உரிய விதத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பழைய சுங்கச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய சுங்கச் சட்டம் நடைமுறைபடுத்தப்படும்.
  • புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்.
  • அரசாங்கத்திற்கு சொந்தமாக காணிகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி அதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
  • டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.  நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட  பொதுச் சொத்துக்களை பயனுள்ள விதத்தில் பொதுமக்களின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
  • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படமாட்டாது.